Sportsஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி - இலங்கை அணிக்கு அபராதம்...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி – இலங்கை அணிக்கு அபராதம் விதிப்பு

-

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் கடந்த 7-ம் தேதி இலங்கை – ஆஸ்திரேலியா இடையே முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் கொழும்புவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணி 17.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதால் இலங்கை அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தசுன் ஷனக்கா தலைமையிலான இலங்கை அணி இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனக்கா தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...