Newsஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு - இலங்கையர்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு – இலங்கையர்களுக்கு சிக்கல்

-

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...