ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே இலங்கை தமிழ் அகதி சிறுமியான தருணிகா முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளான பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் இரண்டாவது குழந்தையான தருணிகா இதுவரை தனது பிறந்தநாளை தடுப்பு முகாம்களிலேயே கழித்திருக்கிறார்.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் அவர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இக்குடும்பம் முன்பு வாழ்ந்த பிலோலா நகருக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில், தருணிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் கொண்டாடி இருக்கிறார்.
ஐந்து வயதாகி இருக்கும் தருணிக்கா, தடுப்பு முகாமிற்கு வெளியே கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.