News ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்டுள்ளனர்.

இயந்திர படகு ஒன்றின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குறித்த 38 பேரும் தற்பொழுது அம்பாறை – பாணமை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆஸ்திரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இதன்போது, அதில் இருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர் .

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.