News ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் - பிரதமர் கோரிக்கை

ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் – பிரதமர் கோரிக்கை

-

ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகயும், இரும்பு தாதுப் பொருள்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளருமாகச் சீனா விளங்குகிறது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்டுள்ள 14 சர்ச்சைகளைக் காரணங்காட்டி சீனா அதன்மீது தடைகளை விதித்தது.

கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து சீனாவில் விசாரணை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலியா கோரியதும், தேசியப் பாதுகாப்புக்காக வெளிநாட்டு முதலீடுகளைச் சோதனைக்கு உட்படுத்தியதும் அந்தச் சர்ச்சைகளில் அடங்கும்.

நேற்று முன்தினம் (ஜூன் 12) ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles), சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹவை (Wei Fenghe), Shangri-La கலந்துரையாடலில் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஒரு மணிநேரம் நீடித்த அந்த உரையாடல், ஒரு முக்கிய முதற்படி என்று மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.