News 2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

-

கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகரின் அளவு போதுமானதாக இல்லை. அதனால் அவற்றை அதிகரிக்க வேண்டும் என Burnet Institute பேராசிரியர் மார்க்கரெட் ஹெல்லர்ட் விக்டோரியா மற்றும் பெடரல் அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தனது கணிப்பின்படி நாட்டில் நடப்பு ஆண்டில் 10,000 முதல் 15,000 வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேயாவில் நோய் பரவலை 20 சதவீதம் குறைத்தாலே 2000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை கண்காணித்தல் ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் மார்கரெட் எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் Jodie McVernon தனது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் போதிய அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்று ஆஸ்திரேலியாவிலும் திடீரென கொரோனா பரவல் வேகமெடுத்து, அதிக உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

Latest news

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குயின்ஸ்லாந்தில் இனி மருந்தக உரிமையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்கலாம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பல மருந்துகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை...

எரிபொருள் விலை அதிகரிப்பால் குவாண்டாஸ் விமான கட்டணங்கள் உயர்வு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக விமான கட்டண அதிகரிப்பு தொடர்பில் குவாண்டாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு மே...

இலவச மின்சார கார் சார்ஜிங்கை நிறுத்தும் NRMA – புதிய சார்ஜிங் சிஸ்டம்மை அறிமுகப்படுத்த திட்டம்

மின்சார கார் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டில், இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தும் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.