Newsஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடுகடத்தப்படும்நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது.

தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவரவு தடுப்புமுகாமைப் பொறுத்தவரை அதற்கு வழியில்லை எனவும், காலவரையறையின்றி தடுத்துவைக்கப்படும் பலர் தற்கொலை, கொலை போன்றவற்றினால் தமது உயிர்களைக்கூட இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்கள், தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...