Newsஉக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத் தேடி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய Tanya முயன்று வருகிறார்.

அவர்களுக்கான தங்குமிட செலவுகள் வாழ்க்கைச் செலவுகளையும் வழங்குவதாக 2 ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதிப்பூண்டுள்ள போதிலும் அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்தியிருக்கிறது.

“உக்ரேனில் போர் தொடங்கிய பொழுது, முதலில் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா வந்த பின் சிறப்பு அகதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடிய செயல்முறையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் என்ன நடந்தது என்றால் உக்ரேனியர்கள் நீண்ட காலமாக தங்க எண்ணுகிறார்கள் என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

அதனால் பார்வையாளர் விசா விதிகள் உக்ரேனியர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது,” என Tanya குடும்பத்திற்கு உதவும் ஆஸ்திரேலிய மருத்துவரான Baptista குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழலினால் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய எண்ணும் உக்ரேனியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் நிச்சயத்தன்மையற்ற நிலையில் அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

நெருக்கடியில் உள்ள விக்டோரியர்களின் கல்வி

விக்டோரியன் கல்வி ஒரு "நெருக்கடியில்" இருப்பதாக STEM குழுக்கள் எச்சரிக்கின்றன. அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு விக்டோரியாவில் மிகவும் திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். STEM (அறிவியல்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...

மெல்பேர்ணில் இலவச உணவு வழங்கும் The Hope Cafe

ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மெல்பேர்ண் உணவகம் ஒன்று இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மெல்பேர்ணில் அமைந்துள்ள The Hope Cafe என்ற உணவகம்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...