News உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத் தேடி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய Tanya முயன்று வருகிறார்.

அவர்களுக்கான தங்குமிட செலவுகள் வாழ்க்கைச் செலவுகளையும் வழங்குவதாக 2 ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதிப்பூண்டுள்ள போதிலும் அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்தியிருக்கிறது.

“உக்ரேனில் போர் தொடங்கிய பொழுது, முதலில் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா வந்த பின் சிறப்பு அகதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடிய செயல்முறையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் என்ன நடந்தது என்றால் உக்ரேனியர்கள் நீண்ட காலமாக தங்க எண்ணுகிறார்கள் என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

அதனால் பார்வையாளர் விசா விதிகள் உக்ரேனியர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது,” என Tanya குடும்பத்திற்கு உதவும் ஆஸ்திரேலிய மருத்துவரான Baptista குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழலினால் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய எண்ணும் உக்ரேனியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் நிச்சயத்தன்மையற்ற நிலையில் அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குயின்ஸ்லாந்தில் இனி மருந்தக உரிமையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்கலாம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பல மருந்துகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை...