News ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பேசைட் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள கேலரி லேனில் மூன்று இளைஞர்கள் சிறுமியை அணுகியுள்ளனர். இதன்போது கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கோரினர்,

இததனையடுத்து கூரிய ஆயுதத்தால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளனர். சிறுமி உடலில் காயங்களுடன் ஃபிராங்க்ஸ்டன் வைத்தியசாலையில் துணை வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த சிறுதி ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி மீது ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.