Newsஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...