Newsஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பிரவேசிக்கின்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்! இலங்கை சென்ற அமைச்சர்

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பிரவேசிக்கின்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்! இலங்கை சென்ற அமைச்சர்

-

இலங்கையில் இருந்து அதிக அளவான அகதிகள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், ஆஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு ஆஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.

இன்று இலங்கை வருகின்ற அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார்.

அந்தநாட்டில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் அகதிகள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் செய்தியை வழங்கும் வகையில், ஆஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் இலங்கைக்கு வருகின்றார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆஸ்திரேலியாவால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் அகதிகள் படகுகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...