News ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

-

ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வெளிநாட்டு பெண் குடியுரிமை பெற போராடி வருகின்றார்.

Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ஆஸ்திரேலியாவை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார்.

ஆனால், சட்ட ரீதியாக அவர் 2068ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவை தனது நாடக சொல்ல முடியாது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக மீதமுள்ள உறவினர் விசா (Remaining Relative Visa) எனப்படும் நிரந்தர வசிப்பதற்கான உரிமையை வழங்கும் விசாவுக்கு Nicole விண்ணப்பத்திருக்கிறார்.

சொந்த நாட்டில் தனக்கு உறவினர் எவரும் இல்லாமல், நெருக்கமான உறவினர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் இந்த விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த விசா பரிசீலனைக்கான காத்திருப்புக் காலம் 50 ஆண்டுகள் என்பதால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் Nicole சிக்கியிருக்கிறார்.

முன்னதாக, அவர் கடந்த 2012ம் ஆண்டு வேலை விடுமுறை விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தாதி கல்வி படிக்க தொடங்கியதும் மாணவர் விசாவுக்கு மாறியிருக்கிறார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கல்வியை தொடர முடியாத நிலையில் மீதமுள்ள உறவினர் விசாவுக்கு விண்ணப்பத்திருக்கிறார்.

அவரது விசா விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதால் இணைப்பு விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...