News மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

-

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகளின் தாயை அவரது மாமனார் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுடனும் தாயகம் திரும்புமாறு கோரிய மாமனாரின் கோரிக்கையை மறுத்தன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவேண்டும் என்று வாக்குவாதம் செய்த நிலையில் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த ஒன்பது வருடங்களாக வசித்து வந்த பெண், பாகிஸ்தானுக்குச் சென்றபோது இந்தக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்த்தில் வசிக்கும் சஜித்தா தஸ்னீமின் கணவர் பாறினில் பணிபுரிகிறார். சஜித்தா அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அவரது கணவர் உட்பட அனைவரும் குடும்பமாக பாகிஸ்தானில் குடியேறிவிடவேண்டும் என்று சஜித்தாவை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அதனை மறுத்த சஜித்தா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆஸ்திரேலிய வாழ்க்கை முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இந்த இழுபறி சில நாட்களாகவே தொடர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆம் திகதி இரவு, இந்த விடயம் வாக்குவாதமாக முற்றியபோது, சஜித்தாவின் வாய்க்குள் அவரது துப்பாட்டவை அடைந்த அவரது மாமனார், கோடரியால் வெட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு அவரது தந்தையார் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது, சஜித்தா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தின் ஊடாக உரிய உதவிகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது. சஜித்தாவின் மூன்று குழந்தைகளுடன் அவரது தகப்பானாருடன் தற்போது லாகூரில் உள்ளார்கள்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.