ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் பெண் ஒருவர் வீடியோ அழைப்பில் ஈடுபட்ட போது கையடக்க தொலைபேசி சார்ஜர் வெடித்ததில் முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளது.
கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்துகொண்டே வீடியோ அழைப்பில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது தீப்பிடித்ததில், கைகளில் முதல் மற்றும் இரண்டாம் டிகிரி தீக்காயங்களுக்குள்ளானார்.
லியாங் என்னும் அப்பெண், நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது, தொலைபேசியின் பேட்டரி குறைவாக இருந்ததால், போனை சார்ஜரில் சொருகி சோபாவில் வைத்துள்ளார்.
அப்போது சார்ஜர் திடீரென்று வெடித்து தீப்பிடித்தள்ளது. இதனால் தன் முழுக்கை மேலாடை மற்றும் ஸ்வெட்டரால் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.
மேலும் போர்வையை பயன்படுத்தி சார்ஜரையும் மூடியுள்ளார். பின்னர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.
தீயின் வேகம் சற்றும் குறையாததால் குளியலறைக்குள் மொத்தமாக வீசி தீயை முழுவதுமாக அணைத்துள்ளார்.
தீயை அணைத்த பின்னர் தனது கைகளில் பெரிய கொப்புளங்களைக் கவனித்தார். அவரது மகள் முதலுதவியாக கையில் களிம்பு தடவி விட்டார், மறுநாள் காலையில் தான் மருத்துவ உதவியை நாடி மருத்துவமனை விரைந்துள்ளார்.
மேலும் இந்த சார்ஜர் நண்பர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.