News கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

-

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்? யாரெல்லாம் அகப்படுகிறார்களோ எல்லோரையும் குறி வைக்கிறார்கள். மீன் பிடிக்க வலை வீசுபவர்களுக்கு எந்த மீன் எங்கே இருக்கும் என்றெல்லாம் தெரியாது. வலையில் விழுவதெல்லாம் அவர்களுக்கு இரை. அவ்வளவுதான்.

நம்மிடம் பணம் இல்லை, எந்த ரகசியமும் இல்லை, அதனால் என்னை ஏன் குறி வைக்கப் போகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அப்படிப்பட்ட ஆள்கள் முக்கியமாகத் தேவை. வேறு எந்த விதத்திலும் உங்களை அரசும் தேடப்போவதில்லை என்று தெரிந்தால், நீங்கள் அப்படிப்பட்ட அப்பாவி என்றால், அதன் காரணமாகவே உங்கள் திறன்பேசியையும் உங்கள் முகநூல்/என்னாப்பு/கீச்சு கணக்குகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வார்கள்.

தேவைப்படும்போது உங்கள் கணினியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாம்பி என்னும் நடைப்பிணச் செயலியை எழுப்பிப் பிறரைத் தாக்கலாம், அல்லது வேறு யாரோ செய்ததை உங்கள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்குத் தடயங்களை விதைக்கலாம். அறிவுக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

எனவே உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர், உடன் பணிபுரிவோர் என்று எவரிடமிருந்தும் எது வந்தாலும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பரபரப்பான தொற்றிக் காணொளி என்று வந்தால் உடனே சொடுக்காதீர்கள். தவறான தொடுப்புகளைச் சொடுக்கினால் உங்களுக்குக் கொலைத்தண்டனை கூடக் கிடைக்கக்கூடும்.

-Mani Manivannan

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.