NewsWikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு - தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

WikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு – தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

-

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் வழக்கில் தலையிட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வழக்கை கைவிடும்படி அமெரிக்காவைத் அல்பனீசி வற்புறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் தொடர்கிறது. உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

அசாஞ் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அவரது பணி அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது என்று அவரது ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசி, டுவிட்டர் பெரிதாக வருவது எல்லாமே பெரிய செய்தி இல்லை என்று கூறி, அந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவாரா இல்லையா என்பதைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ் 3 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

அவருக்கு எதிரான பொய் வழக்கை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவரது மனைவி
ஸ்டெல்லா அசாஞ் (Stella Assange) கூறினார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...