பொன்னியின் செல்வன் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது

0
201

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் டீசலுக்கான ஒரு சிறிய டீசரை மட்டும் வீடியோவாக வெளியிட படக்குழு முடிவ செய்துள்ளனர்.

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தினம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதில் முதல் பாகம் செப்டம்பர் இறுதியில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை, சோழமண்டலமான தஞ்சாவூரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஜூலை 7ஆம் தேதி நடைபெறவிருந்த அந்த விழாவில், பங்கேற்க படத்தின் நடிகர் மற்றும் நடிகைகளிடம் கால்ஷீட் பெறப்பட்டு இருந்தது. மேலும் அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு, டீசர் வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சில கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால், தஞ்சாவூரில் நடைபெறவிருந்த டீசர் வெளியீட்டு விழா கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக அதே தேதியில் டீசருக்கான ப்ரோமோ வீடியோவை (டீசருக்கான சிறிய டீசர்) மட்டும் வெளியிட இயக்குநர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. எனவே, ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவிருந்த பொன்னியின் செல்வன் டீசர், ஜூலை இறுதி வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉக்ரைன் போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் – நேட்டோ தலைவர் எச்சரிக்கை
Next articleசமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்