Newsஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் - பாடசாலை சென்ற சிறுமிகள்

ஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் – பாடசாலை சென்ற சிறுமிகள்

-

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த நிலையில், பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் தடுப்பு காவலில் இருந்து விடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், பிரியா- நடேசலிங்கத்தின் குழந்தைகளான கோபிகா மற்றும் தர்ணிகா பிலோலா நகரில் முதல் நாள் பாடசாலைக்கு சென்று வந்துள்ளனர.

“எங்களது குழந்தைகள் பிலோலாவில் அமைதியாக குடியமர்ந்து கல்வியைப் பெற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளில் பிரியாவும் நடேசும் பல முறை கூறியிருந்தனர். அது இன்று நடந்திருக்கிறது,” என Bring Priya, Nades and their girls home to Biloela குழு பதிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், சுமார் 4 ஆண்டுகள் தடுப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை இக்குடும்பத்துக்கு ஏற்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...