Newsபாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் வெற்றி பயண...

பாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் வெற்றி பயண கதை

-

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சாந்தன் என்பவர் ஆஸ்திரோலியாவிற்கு படகு மூலம் புகழிடம் தேடி வந்தார். தற்போது இவர் மெல்பனில் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை சிறு வணிகமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.

சமீபத்தில் வானொலி ஒன்றிற்கு சாந்தனு அளித்த பேட்டியில் தான் எவ்வாறு அகதியாக வந்து, தொழில் துவங்கும் அளவிற்கு உயர்ந்தார் என்ற கதையை விளக்கமாக கூறி உள்ளார்.

பேட்டியில் சாந்தன் கூறுகையில், இலங்கை ஏற்பட்ட நெருக்கடியான நிலை காரணமாக இனி அங்கு வாழ முடியாது என கருதி, படகு வழியாக மலேசியா சென்றடைந்தோம். அங்கு அகதி என்பதால் வேலைவாய்ப்பு கிடைப்பது மிக சிரமமாக இருந்தது. அப்படியே வேலை கிடைத்தாலும், மிக குறைவான சம்பளத்திற்கே பணியமர்த்தினர். இதனால் மாற்று வழி தேடி ஆக வேண்டும் என நினைத்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா வர முடிவு செய்தோம்.

மலேசியாவில் இருந்து 250 பேர் ஒரு கப்பலில் ஏறி ஆஸ்திரேலியா நோக்கி வரும் போது நடுக்கடலில் என்ஜின் பழுதானது. இதனால் கடலிலேயே 11 நாட்கள் வரை இருக்க வேண்டியதாக இருந்தது. பிறகு பழுதை சரி செய்து புறப்பட்டு வரும் போது, சர்வதேச எல்லையில் இந்தோனேஷிய கடற்படை எங்களை சிறைபிடித்து அழைத்துச் சென்றது. சில நாட்களில் நாங்களே உங்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதோடு, எங்களை வைத்து பராமரிக்க முடியாது என்றும் சொல்லி விட்டார்கள்.

பிறகு அங்கிருந்து தப்பித்து இந்தோனேஷியாவில் சில இடங்களில் பதுங்கி வாழ்ந்தோம். பிறகு படகு ஏற்பாடு செய்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை வந்தடைந்தோம். அவர்கள் எங்களுக்கு 100 டாலர்கள் அளித்து, தங்குவதற்கு வீடு அமைத்துக் கொள்ள சொன்னார்கள். ஆங்கில அறிவு இல்லாததால் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். பிறகு படிப்படியாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். அங்கு 18 மாதங்கள் ஆய்வு நடத்திய பிறகே விசா வழங்கி, மெல்பர்ன் அனுப்பி வைத்தனர்.

முதலில் துணை ஒப்பந்த அடிப்படையில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்தேன். அதில் சொற்பமான வருமானமே கிடைத்தது. 2010 ல் இந்தியா சென்று திருமணம் செய்து கொண்டு, 2011 ல் என் மனைவியை இங்கு அழைத்து வந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்த வேலை செய்ததால் ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தது. துணை ஒப்பந்த அடிப்படையில் பல வேலைகளை செய்தோம்.

பிறகு ஒப்பந்தகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதை வைத்து ஒப்பந்தங்களைப் பெற்று சுத்தம் செய்து பணிகளை செய்தோம். அதில் போட்டிகள் அதிகம் இருந்ததால், பிறகு பாதுகாப்பு நிறுவனத்தை துவங்க முடிவு செய்தோம். ஆனால் ஆஸ்திரேலிய விதிகளின் படி, பாதுகாப்பு நிறுவனம் துவங்க வேண்டுமானால், அது தொடர்பான பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனால் ஓராண்டு பட்டயப்பட்டிப்பை முடித்து பாதுகாப்பு நிறுவனத்தை துவக்கினோம். இன்று அகதிகளாக வருபவர்கள் பலருக்கும் உதவி வருகிறேன்.

சுத்தம் செய்வது மற்றும் பாதுகாப்பு இரண்டிலும் இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆயுதங்களை எடுத்துச் செல்வது, பணத்தை கொண்டு செல்வது, பணத்தை கொண்டு சென்று ஏடிஎம்.,களில் நிரப்புவது போன்ற பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கும். அதே போல் நானும் , எனக்கு கீழ் பணிபுரிபவர்களும் தங்களின் சான்றை சரியாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறையும் அதுபற்றி விக்டோரியா போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லா விட்டால் எங்களின் உரிமங்கள் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த நாட்டிற்கு வந்து தொழில் துவங்கி, எங்களையும் முன்னேற்றிக் கொண்டு, எங்களைப் போன்று அகதிகளாக வந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு, சம்பளம் ஆகியவற்றை கொடுத்து முன்னேற்றி வருகிறோம். அதனால் முடியாது என எத்தனை பேர் என்ன சொன்னாலும் நாம் நம்பிக்கையுடன் நம்மை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை தேட வேண்டும் என்றார் சாந்தன்.

Latest news

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வரும் விக்டோரியாவின் கடன் சுமை

2024-25 நிதியாண்டில் விக்டோரியா அரசாங்கத்தின் நிகரக் கடன் ஒரு மணி நேரத்திற்கு $2 மில்லியன் அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. அதன்படி, ஒரு வருடத்தில் கடன்...

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரெய்ன்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

எச்சரிக்கை..! உணவுப் பொருளில் கண்ணாடித் துண்டுகள்

ஜாடிகளில் கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Coles, Woolworths மற்றும் IGA பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பிரபலமான ஊறுகாய் Jalapenos-இற்கு அவசரகால திரும்பப் பெறுதல் உத்தரவு...