Sports ஆஸ்திரேலியா அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு ஆறுதல் வெற்றி!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சாமிக்க கருணாரத்ன 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Josh Hazlewood, Pat Cummins மற்றும் Kuhnemann ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் Alex Carey ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் மஹீஸ் தீக்சன 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்பட்ட நிலையில் தொடராட்ட நாயகனாக குசல் மெந்திஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...