News ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

-

சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு சிட்னியில் நடந்த பொலிஸ் நடவடிக்கையில் மேலும் எட்டுப்பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாமதேயத் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் சுமார் 24 லட்சம் டொலர் பணத்தை மோசடி செய்து, பல்வேறு வங்கிக்கணக்குகளின் ஊடாக வெளிநாட்டுக்குக் கடத்தியிருப்பதாக இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்ற வலையமைப்பில் மேலும் பலர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் அவதானமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.