சோதனைகளை வென்ற சாதனை தமிழன் தமிழ்மாறன்

0
339

இலங்கை இறுதிப் போரில் தனது ஒரு காலை இழந்த தமிழ் மாறன் புகழிடம் தேடி ஆஸ்திரேலியா வந்த தமிழ்மாறன், இன்று ஆஸ்திரேலியாவில் ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.

தனியார் வானொலி தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழ்மாறன் கூறுகையில், இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஒரு காலை இழந்த நான்கு 2015 ல் படகு மூலம் மட்டக்களப்பில் ஆஸ்திரேலியாவிற்கு வந்தேன். 14 நாட்கள் பயணம். மொத்தம் 54 பேர் அந்த படகில் வந்தோம். சாப்பாடு, தண்ணீர் என அனைத்தும் குறைவான அளவிலேயே இருக்கும். இதைத் தவிர இயற்கை சீற்ற பிரச்சனைகள். காற்று, மழையால் எங்கள் படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் உயிருடன் இங்கு சேருவோமா என்ற நிலையிலேயே இருந்தோம்.

கொக்கன் தீவிற்கு வந்த என்னை அங்கிருந்து 2–3 நாட்களில் கிறிஸ்துமஸ் தீவிற்கு மாற்றினார்கள். பிறகு அங்கிருந்த டார்வனிற்கும், பிறகு அங்கிருந்து பிரிஸ்பன்னிற்கும் மாற்றினார்கள். இப்படி தடுப்பு முகாம்களில் கிட்டதட்ட 3 மாதங்கள் வரை தங்கி இருந்தேன். தற்போது நான் சிட்னியில் வாழ்ந்து வருகிறேன். இங்கு எங்கள் கிராமத்தை சேர்ந்த நிறைய பேர் வசிக்கிறார்கள், தொழில் வாய்ப்புக்கள் அதிகம் எனக்கூறி எனது உறவினர் ஒருவர் தான் பிரிஸ்பனில் இருந்து சிட்னிக்கு அனுப்பி வைத்தார். இங்கு 5 வருட விசாவிலேயே என்னை தங்க அனுமதித்துள்ளனர்.

இங்கு கார் கழுவும் வணிகம் ஒன்றை நடத்தி வருகிறேன். அதாவது சேவை தேவைப்படுபவர்களின் வசிப்பிடங்களுக்கோ அல்லது பணியிடங்களுக்கோ சென்று கார் கழுவி தரும் மொபைல் கார் வணிகத்தை செய்து வருகிறேன். ஒரு சிறந்த முதலாளியிடம் பல வருடங்களாக பணியாற்றி, அவரிடம் இருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொண்டுள்ளதால் இந்த வணிகத்தில் பெரிய அளவில் சிரமங்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. இருந்தாலும் என்னை தெரிந்தவர்கள் மிக கண்ணியமாக நடத்துவார்கள். இதுவே தெரியாதவர்கள், எங்களுக்கு ஆங்கில அறிவு குறைவாக இருப்பதால், படகில் வந்தவர்கள். நாகரீகம் தெரியாதவர்கள் என்பது போல் பேசுவார்கள். அது மனதளதில் பாதிப்பாக இருக்கும்.

இது தவிர எங்களை போன்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்றால், நிறைய பேருக்கு விசா கிடையாது. நிறைய பேருக்கு திறமைகள் இருந்தும் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றன.வாழ்விட உரிமை இல்லாததால் பலரும் முன்னேற முடியாத நிலை உள்ளது. இங்குள்ள தமிழ் சமூகத்தினர்கள், நாங்கள் படகு மூலம் வந்தவர்கள்; எங்களை வெளியேற்ற வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தனர். ஆனால் படகு மூலம் வந்தாலும், எப்படி வந்தாலும் நாங்கள் அகதிகள். எங்களை ஒரு தாய் பிள்ளைகளாக கருதி, வாழ்வுரிமைகளை அளித்தால் எதிர்காலத்தில் என்னை போன்ற பலரும் வணிக துறையில் முன்னேற முடியும்.

என்னை போன்ற இளைஞர்கள் பொழுதுபோக்குகளில் பொழுதை வீணடிக்காமல், இங்குள்ள தொழில்முறை கல்வி கற்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பகுதி நேர வேலை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய கோரிக்கை என்றார் தமிழ் மாறன்.

Previous article‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ – நடிகர் மாதவன்
Next articleஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!