Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...