Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...