யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் நாளாந்தம் மதிய உணவு விநியோகிக்கப்படுகின்றது.
இதற்கான முழுமையான செலவுகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் ஏற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் செயல் மாணவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
விரிவுரையாளர்களினால் அவர்களது செலவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நாளாந்த மதிய உணவு விநியோகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் இதன்மூலம் தங்களது மதிய நேர வெளிச்செலவை மீதப்படுத்தியுள்ளனர்.
இந்த செயலை பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.









