News ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினம்!

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினம்!

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் ஜந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான கடல்வாழ் உயிரினம் இதுதான் என்கிறார்.

சமூக வலைதளங்களில் ட்ராப்மேன் பெர்மகுய் என்று அழைக்கப்படும் ஜெசோன், அவரது சொந்த ஊரான பெர்மகுய் கடற்கரையில் அந்த ஜந்துவை பிடித்ததாகக் கூறுகிறார்.

பிங்க் நிறத்துடனும், வீங்கிய கண்களுடனும், முகம் முழுக்க வாயாக இருப்பதுபோன்று பெரிய வாயுடனும், கூரிய பற்களுடனும் அந்த மீன் அகோரமாக காட்சியளித்துள்ளது.

சுமார் 540 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த மீன் சுமார் 4 கிலோ எடையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஜெசோன்.

ப்ளாப்ஃபிஷ் மீன்கள் சைக்ரோலுடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது ஒரு ஆழ்கடல் மீன். இது ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் நியூசிலாந்தின் கரையோரங்களில் உள்ள ஆழமான நீரில் வாழ்கிறது. இந்த மீன்கள் 30 செ.மீட்டருக்கும் குறைவான வளர்த்தியுடையவை. கடல் மட்டத்தை விட 60 முதல் 120 மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடிய 600 முதல் 1,200 ஆழமான நீரில் வாழக்கூடியவை.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.