வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை தளர்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விமானம் மற்றும் கப்பல்களில் பயணம் செய்பவர்கள் கோவிட்-க்கு எதிரான தடுப்பூசி பற்றிய தகவல்களை வழங்காமல் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையவும் வெளியேறவும் முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வரும் மக்களுக்கு “ஆஸ்திரேலிய குடிமக்கள்” அல்லது “ஆஸ்திரேலிய குடிமக்கள் இல்லை” என்பதைக் குறிக்கும் டிஜிட்டல் பயணிகள் அறிவிப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.