புயலின் தாக்கத்தால் இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்! மூவர் மீட்பு! 20 பேர் மாயம்

0
188

ஹாங்காங்கின் கடல் பகுதியில் இரண்டாக உடைந்து மூழ்கும் கப்பலில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 20க்கும் அதிகமானோரைத் தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாபா (CHABA) புயலின் தாக்கத்தால் 30 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் இரண்டாக உடைந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மூவரை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புயலின் தாக்கத்தால் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷான்ஜியாங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.