தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்

0
204

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கன் (HORMOZGAN) நகரில் ரிக்டர் அளவு கோலில் ஆறுக்கும் அதிகமாக பதிவான மூன்று நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நிலநடுக்கத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், அடுத்த நில நடுக்கங்களில் பாதிப்புகள் அதிகம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நில நடுக்கத்தை அடுத்த நில அதிர்வுகள் சுமார் 30 முறை நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நில நடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும், பலரும் தற்காலிகக் குடில்களிலேயே தங்கி உள்ளதாகவும் அந்நாட்டு உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன. வீடுகள் பல இடிந்து விழுந்துள்ள நிலையில், பல சிற்றூர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தெற்காசியாவின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து புவியியல் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய நிலப்பலகை (Indian tectonic plate) ஐரோப்பா- ஆசியாவை உள்ளடக்கிய யூரேசிய நிலப்பலகையுடன் (Eurasian plate) வடக்கு நோக்கி தள்ளுவது மோதுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த நிலநடுக்கங்கள் இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர் புவியியல் வல்லுநர்கள். ஜூன் 23 அன்றுடன் நின்ற இந்த நிலநடுக்கங்கள் மீண்டும் ஈரானில் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்
Next articleபுயலின் தாக்கத்தால் இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்! மூவர் மீட்பு! 20 பேர் மாயம்