ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.
உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ரஷ்ய அமைச்சர்கள், செல்வந்தர்கள் என மேலும் 16 பேருக்குப் பயணத் தடை விதிக்கவிருப்பதாக ஆல்பனீசி கூறினார். ஆஸ்திரேலியா இதுவரை ரஷ்யர்கள் 843 பேருக்குத் தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு மேலும் நூறு மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்படும் என்று ஆல்பனீசி கூறினார். ஆனால் அந்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஆஸ்திரேலியா உக்ரைனுக்குக் கணிசமான உதவிகளைச் செய்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.