News ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.

உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஷ்ய அமைச்சர்கள், செல்வந்தர்கள் என மேலும் 16 பேருக்குப் பயணத் தடை விதிக்கவிருப்பதாக ஆல்பனீசி கூறினார். ஆஸ்திரேலியா இதுவரை ரஷ்யர்கள் 843 பேருக்குத் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு மேலும் நூறு மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்படும் என்று ஆல்பனீசி கூறினார். ஆனால் அந்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஆஸ்திரேலியா உக்ரைனுக்குக் கணிசமான உதவிகளைச் செய்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

Latest news

தாய்லாந்தில் தங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பதுங்கிய கோட்டாபயவின் அடுத்தக்கட்ட திட்டம்

நாட்டைவிட்டு பயந்தோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நோக்கி நாளை பயணமாகவுள்ளார்.

தடையை மீறி இலங்கைக்குள் நுழையும் கப்பல் – தீவிர அவதானத்தில் இந்தியா

சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி...

ஆஸ்திரேலியாவில் முகக் கவசம் இல்லை என்றால் 1000 டொலர் அபராதம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க...