விரைவில் 30,000 அடி உயரத்தில் படுக்கையில் உறங்கலாம்

0
322

சிக்கனப் பிரிவுப் பயணிகள் விமானத்தில் உறங்கவும் ஓய்வெடுக்கவும் Air New Zealand நிறுவனம் அறைகளைத் (Sleeping Pods) தயார்செய்கிறது. இப்பிரிவுப் பயணிகளுக்கு ஓய்வெடுக்கும் அறைகளை வழங்கும் உலகின் முதல் விமான நிறுவனம் இதுவே.

விமானத்தில் தூங்க முடியாததே பயணிகளின் முதன்மையான கவலை என 5 ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டதாக நிறுவனம் கூறியது. தங்கள் வாடிக்கையாளர்கள் விமானப் பயணத்தின்போது நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அந்த உறங்கும் அறைகளை உருவாக்கி வருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

குளிரூட்டும் தலையணைகள், மெத்தைகளை உள்ளடக்கிய அந்த அறைகள் 2024ஆம் ஆண்டு முதல் பயணிகளுக்கு வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தப் பயணிகள் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பயணிகள் இவ்வறைகளை 4 மணி நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அறையை ஒருவர் பயன்படுத்திய பின்னர் அதன் படுக்கை விரிப்புகள் மாற்றப்பட்டுச் சுத்திகரிக்கப்படும். அதனால் சுத்தம், சுகாதாரம் பற்றிப் பயணிகள் கவலைப்படத் தேவையில்லை.

Previous articleமெல்பர்னில் கடும் விலைவாசி உயர்வு…உணவிற்காக பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்
Next articleஇந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம்