மெல்பர்னில் கடும் விலைவாசி உயர்வு…உணவிற்காக பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்

0
404

மெல்பர்னில் பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. சாமாணியர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசாங்க உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் இலவசமாகத் தரும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக மெல்பர்னில் பல மணி நேரமாக மக்கள் காத்திருந்து உணவுப் பொருட்களை பெற்றுச் செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் தினமும் குறைந்தபட்சம் 50,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுப் பொருட்கள் பெட்டியில் காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள் போன்றவைகள் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களை உள்ளடக்கிய பெட்டிகளை நீண்ட வரிசையில் கார்களில் காத்திருந்து மக்கள் பெற்றுச் செல்கின்றனர்.

Previous articleஆஸ்திரேலியாவில் பெற்றோரின் செயலால் உயிரிழந்த சிறுமி – பொலிஸார் வெளியிட்ட தகவல்
Next articleவிரைவில் 30,000 அடி உயரத்தில் படுக்கையில் உறங்கலாம்