இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம்

0
222

2021ல் நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வேரியன்ட் இன்னும் மக்களிடையே தொடர்ந்து கோவிட் தொற்றை பரப்பி வருகிறது. ஒமைக்ரான் பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன் நாட்டில் மிகவும் பரவலாக காணப்படுகிறது மற்றும் தற்போது வரை ஏற்பட்டு வரும் தொற்று பாதிப்புகளில் அதிக பங்கை கொண்டுள்ளது.

ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்ஸ்களான BA.4 மற்றும் BA.5 அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. தற்போது BA.2.75 என்று அழைக்கப்படும் மற்றொரு வீரியமுள்ள ஒமைக்ரான் சப்-வேரியன்ட் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வேரியன்ட் குறித்து உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலிய சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த புதிய வேரியன்ட் இயற்கையிலேயே “ஆபத்தானதாக” இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஒமைக்ரானின் புதிய சப்-வேரியன்ட்டாக குறிப்பிடப்படும் BA.2.75, இந்தியாவில் சுமார் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), நாட்டில் இதன் பரவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த புதிய சப்-வேரியன்ட் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், சுகாதார நிபுணர்கள் இதை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளனர்.

BA.2.75 இதுவரை 8 நாடுகளில் சுமார் 85 பேரை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 69 பேர் அடங்குவர். டெல்லி (1), ஹரியானா (6), இமாச்சலப் பிரதேசம் (3), ஜம்மு (1), கர்நாடகா (10), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (27), தெலங்கானா (2), உத்தரப் பிரதேசம் (1), மற்றும் மேற்கு வங்கம் (13) உள்ளிட்ட மாநிலங்களில் BA.2.75 கண்டறியப்பட்டுள்ளது. தவிர ஜப்பான் (1), ஜெர்மனி (2), இங்கிலாந்து (6), கனடா (2), அமெரிக்கா (2), ஆஸ்திரேலியா (1), மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த சப்-வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது.

Previous articleவிரைவில் 30,000 அடி உயரத்தில் படுக்கையில் உறங்கலாம்
Next articleபாடி பில்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த தாலிபான் அரசின் புதிய உத்தரவு