ஆஸ்திரேலியாவில் 8 வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
அவர் டைப் வன் நீரிழிவு நோயாளியாகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் நீரிழிவு நோய்கான ஊசி செலுத்திக் கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எலிசபெத் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், பெற்றோர் மற்றும் அந்த குழுவினர் சிறுமிக்கு ஊசி வழங்காமல் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மாத்திரம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உயிரிழந்த பெற்றோர் மீது கொலை, சித்திரவதை மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக 19 முதல் 64 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.