News பில் கேட்ஸ் இணையத்தில் வெளியிட்ட 48 ஆண்டுகள் பழமையான Resume!

பில் கேட்ஸ் இணையத்தில் வெளியிட்ட 48 ஆண்டுகள் பழமையான Resume!

-

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் தனது பழைய Resume எனப்படும் சுய விபர கோவையை பகிர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி துவங்கினார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெற்றிநடை போடத்துவங்கிய காரணத்தினால் பெரும் செல்வந்தர் ஆனார் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ப்ஸ் இதழிலின் அடிப்படையில் இவர் உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிறார்.

இவருடைய சொத்து மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில், பில் கேட்ஸ் தனது LinkedIn பக்கத்தில் 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய Resume-ஐ பகிர்ந்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்த போது இந்த Resume-ஐ தயார் செய்திருக்கிறார் அவர். இதில் தனது விருப்ப துறைகளாக “சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் அல்லது சிஸ்டம்ஸ் புரோகிராமர்” என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது உயரம் மற்றும் எடையையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரை சார்ந்தவர்கள் யாரும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹார்வர்டில் இயங்குதள அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கம்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கணினி கிராஃபிக்ஸ் போன்ற படிப்புகளை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பில் கேட்ஸ் தனது Resumeஇல் FORTRAN, COBOL, ALGOL, BASIC போன்ற நிரலாக்க மொழிகளில் தனக்கு இருக்கும் அனுபவம் குறித்து பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து,”நீங்கள் சமீபத்தில் பட்டம் பெற்றவராக இருந்தாலும் சரி அல்லது கல்லூரியில் இருந்து வெளியேறியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முந்தைய என்னுடைய Resumeயை விட உங்களுடையது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...