News ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை வெள்ளவாய எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் விதிமுறைகளை மீறி செயற்பட்டார்கள் என தெரிவித்து 13 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.