Newsசிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் - பொது மக்களுக்கு...

சிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அடுத்த வாரம்வரை வெள்ள நெருக்கடி தொடரலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் 23 வட்டாரங்களில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) பார்வையிட்டார்.

குடியிருப்பாளர்களுக்கு அவசர உதவியாக 680 டொலர் ரொக்கம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

என்றாலும், வெள்ளத்தைச் சமாளிப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிலர் குறைகூறுகின்றனர்.

வெள்ளம் ஏற்படப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று-கூறிய அல்பனீசி அந்தப் பிரச்சினையைத் தமது அரசாங்கம் சமாளிக்கும் என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...