News அமைச்சர் பதவியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்!

அமைச்சர் பதவியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்!

-

இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள அமைச்சர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்படும் வரை தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நிறுவனமொன்றிடம் கையூட்டு பெற்றதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகள் முடியும் வரை பதவியில் இருந்து விலகுமாறு அரச தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.