ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெரியவருக்கும் சுமார் 600 வெள்ளியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 200 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்படும்.
பிரதமர் அல்பனீசியும் நியூ சௌத் வேல்ஸின் முதல்வரும் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.
திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஒரே இரவில் சுமார் 100 பேரைக் காப்பாற்றியதாக மாநில அவசரச் சேவை குழு தெரிவித்துள்ளது.