Newsஇலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு!

இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு!

-

இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார்.

டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன்ஸ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த தொழில் அதிகாரி ஆவார். மற்றும் இந்தியா மற்றும் இந்து சமுத்திரக் கிளையின் உதவி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

முன்னதாக அவர், ஸ்வீடன் மற்றும் தாய்லாந்து, பிரேசிலுக்கான தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான ஆஸ்திரேலியாவின் நிரந்தர தூதுவராகவும் பணியாற்றினார்.

இந்தநிலையில், 70 வருடங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவியளிக்க ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...