தமிழகத்தில் ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா.. ஒருவர் பலி

0
263

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 31,707 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,93,599 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 18,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,103 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 38,028 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், கோயம்புத்தூரில் 125 பேருக்கும், திருவள்ளூரில் 184 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 124 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleஇனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்
Next articleஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கி 45 நிமிடங்கள் காருக்குள் பரிதவித்த மூதாட்டி!