‘பொன்னியின் செல்வன்’ இந்தி டீசரை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்

0
236

கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படமாக உருவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வனை படமாக மாற்றும் முயற்சியில் எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் ஈடுபட்டு அந்த முயற்சியில் தோல்வியை தழுவி இருந்தனர். 1990களில் இதற்கான முயற்சியை மணிரத்னம் முதலில் மேற்கொண்டு பின்னர் கைவிட்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பொன்னியின் செல்வன் உருவாக்க பணிகள் தொடங்கி நிறைவுபெற்று, நாளை டீசர் வெளியாக உள்ளது.

கடந்த 4 நாட்களாக பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும், முக்கிய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக த்ரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

படத்தின் டைட்டில் ஆன பொன்னியின் செல்வன் கேரக்டரில், ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி டீசரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுவார் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Previous articleஇனி தமிழிலும் அரஃபா உரை : சவுதி அரசு
Next articleஇனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்