இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் போட்டி..?

0
228

இங்கிலாந்து உயர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இருவரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்(49 வயது), பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் களம் காணும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனும் களம் காணுகிறார். சுயெல்லா பிராவர்மேன் பிரிட்டன் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர்.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை முதலில் அறிவித்தவர். 42 வயதான சுயெல்லா பிரேவர்மேன், போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் அங்கம் வகித்தோரில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த முதல் உறுப்பினர் ஆனார். ஜான்சன் பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பதற்கு முன்பே அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார். இது புதன்கிழமை இரவு நடந்தது. ஒரு காலத்தில் ஜான்சனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஜான்சனின் அமைச்சரவையில் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்த பின்னர், பிரிட்டன் பிரதமரை பதவி விலக வலியுறுத்தும் குழுவில் சேர்ந்தார்.

சுயெல்லா பிராவர்மேன் இந்திய வம்சாவளி பெற்றோரான கிறிஸ்டி மற்றும் உமா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு கிரேட்டர் லண்டனில் உள்ள ஹாரோவில் பிறந்தார். அவர் 2005 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பொதுத் தேர்தலில் லெய்செஸ்டர் கிழக்கில் போட்டியிட்டார். அவர் 2020 இல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்க்கான அட்டர்னி ஜெனரலாக(அரசின் தலைமை வழக்கறிஞராக) நியமிக்கப்பட்டார்.

Previous articleநியூசிலாந்தில் நுழைந்தது குரங்கு அம்மை… ஒருவருக்கு பாதிப்பு உறுதி
Next articleObituary: Mrs Kunamany Aruliah