நியூசிலாந்தில் நுழைந்தது குரங்கு அம்மை… ஒருவருக்கு பாதிப்பு உறுதி

0
91

ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை பரவலை தடுப்பதற்கு பெரியம்மை தடுப்பூசிகளை பெற்று பயன்படுத்துவது குறித்து நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறுகின்றன.