சந்திரமுகி-2 படத்தில் இணையும் பிரபல நடிகை

0
129

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பது குறித்து லட்சுமி மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.