பதவி விலகிய பிரதமர் : தொடரும் போராட்டம் – இலங்கையில் சர்வ கட்சி ஆட்சி..?

0
239

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அதேபோல், அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததையடுத்து இலங்கையில் சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் பணிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் சர்வ கட்சி அரசாங்கத்தை விரைவாக அமைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் பதவிகளின் எண்ணிக்கை 10 ஆக மட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சி அமைச்சர்களுக்கு தலைவர் பதவி வழங்காமல் தலைமைகளை உள்ளடக்கிய தேசிய தலைமைத்துவ சபை உருவாக்க முடிவு செய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஇலங்கைக்கு தேவையான உதவி செய்ய இந்தியா தயார்
Next articleமக்கள் அமைதி காக்க வேண்டும்: இலங்கை ராணுவ தளபதி வேண்டுகோள்