News இலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

இலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

-

ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கூறப்படும் 77 பேர் மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.