Newsஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் - சபாநாயகர்

ஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் – சபாநாயகர்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...